இதென்ன புதுசா இருக்கே? காளி வெங்கட்டுக்கு சாய் பல்லவி ஜோடியா?

26 January 2021, 8:49 pm
Quick Share

நடிகை சாய் பல்லவி, காளி வெங்கட் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. கஸ்தூரி மான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பலல்வி. இந்தப் படத்தைத் தொடர்ந்து தாம் தூம் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களுமே அவரது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தவில்லை. இதையடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த பிரேமம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இளைஞர்களிடையே குறிப்பாக லவ்வர்ஸ்க்கிடையில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதன் மூலம் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இதில் சாய் பல்லவியின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு வந்தது. இதையடுத்து, லவ் ஸ்டோரி, விராட பருவம், ஷ்யாம் சிங்க ராய், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், காளி வெங்கட் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் காளி வெங்கட் வ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அகம் புறம், நெல்லு, கலகலப்பு, உதயம் என்.ஹெச்4, தெகிடி, மாரி, சதுரன், உறுமீன், இறுதிச் சுற்று, மிருதன், டார்லிங் 2, இரும்பு திரை, கஜினிகாந்த், மகாமுனி, பெட்ரோமேக்ஸ், சூரரைப் போற்று, கன்னி ராசி என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கதை பிடித்திருந்தால் கண்டிப்பாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0