தளபதி 66: தல இயக்குநருடன் கூட்டணி சேரும் தளபதி விஜய்?

21 January 2021, 5:46 pm
Quick Share

விஜய் நடிக்க இருக்கும் தளபதி66 படத்தை அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட இயக்குநர் ஹெச் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிகில் படத்தைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தையும் விஜய் ஹிட் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.200 கோடி வரையில் வசூல் கொடுத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வரையில் வசூல் அள்ளியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயகக்த்தில் வந்த இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர், சஞ்சீவ், ஸ்ரீமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தளபதி65 படத்திற்கு பூஜை போடப்படுகிறது. தொடர்ந்து, 8ஆம் தேதி தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிறது.

நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி65 திரைக்கு வருகிறது என்று தளபதி65 டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே, தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். ஆனால், இது வெறும் வதந்தி தான் என்று அருண் விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் விக்கிப்பீடியா பக்கத்தில் தளபதி65 படத்தில் விஜய், அருண் விஜய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, மற்றும் பக்கத்தில், விஜய் ஹீரோ என்றும் விக்ரம் வில்லன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக சியான் விக்ரம் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருமுகன் படத்தில் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருந்தாலும், அடுத்ததாக தளபதி66 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலை மையப்படுத்திய இந்தப் படத்தின் கதையை சர்கார் படத்தின் போது விஜய்யிடம் இயக்குநர் ஹெச் வினோத் கூறியிருக்கிறார். கதை பிடித்திருந்தாலும், சர்கார் படம் அரசியல் படம் என்பதால், அப்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
தற்போது மறுபடியும், அந்த கதையை விஜய் கையிலெடுத்துள்ளாராம்.

ஆதலால், ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பதற்கு ரெடியாக இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. தற்போது வலிமை படத்தில் இயக்குநர் ஹெச் வினோத் பிஸியாக இருக்கிறார். அதே போன்று தளபதி65 படத்தில் நடிப்பதற்கும் விஜய் ரெடியாகிவிட்டார். இந்தப் படங்கள் முடிந்த பிறகு தளபதி66 படத்தில் இருவரும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.