லவ் யூ ஸ்வீட் ஹார்ட்.. ஷாக் கொடுத்த பெண் – எமோஷ்னலான KPY பாலா..!

Author: Vignesh
29 January 2024, 1:15 pm

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா. இப்போது பாலா செய்துள்ள ஒரு விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

kpy bala

முன்னதாக, பாலா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் மக்களுக்கு பொது சேவையும் செய்து வருகிறார். சமீபத்தில் மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்திருந்தார்.

kpy bala

சமீபத்தில், பாலா மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோவை வழங்கியிருக்கிறார். இதைப்பற்றி பாலா பேசிய போது, மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. அவசர காலத்தில் ஆட்டோவில் கூட செல்ல முடியவில்லை.

kpy bala

அதனால், தான் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச ஆட்டோவை தொடங்குகிறோம். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பெட்ரோல் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். இனி ஒரு உசுர கூட கஷ்டப்படக் கூடாது என்று பாலா பேசி இருந்தார்.

இந்நிலையில், KPY பாலாவுக்கு சமீபத்தில் பெண் ஒருவர் ஷாக் கொடுத்திருக்கிறார். அதாவது, பாலாவின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அந்த பெண் அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பாலா நெகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் சமீபத்தில் ஒரு அதிசய பெண்ணை பார்த்தேன். அவர் தன்னுடைய கைகளில் என்னுடைய பெயரை டாட்டூ போட்டிருந்தார். நான் இதற்கு தகுதியானவனா என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. உங்களை அதிகம் மதிக்கிறேன். மிகவும் நன்றி லவ் யூ ஸ்வீட் ஹார்ட் மிகவும் எமோஷனலாக உணர்கிறேன். மீண்டும் சொல்கிறேன் ஐ லவ் யூ லாட்ஸ் உயிரே என பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • kantara 2 movie actor passed away while swimming in the river ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த காந்தாரா நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்…