மகளின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய யோகி பாபு – வைரலாகும் புகைப்படங்கள்!

Author: Shree
26 October 2023, 6:35 pm

தமிழ் சினிமாவ பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி தமிழ் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஆவது தோன்றிவிடுவார். இவரின் டைமிங் காமெடிக்காக ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்ப்போது LGM மற்றும் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதறகக அவர் மற்ற காமெடி நடிகர்களை காட்டிலும் அதிகம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் கிடைத்து வருகிறது. யோகி பாபு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட செய்யாறு பாலு ” ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கைரை ” என்ற கதையாக இன்று தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இல்லாத பட்சத்தினால் வேறு வழியில்லாமல் யோகி பாபுவின் காமெடி பார்க்கவேண்டிய கட்டாயத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சந்தானமும் போய்ட்டாரு, சூரி போய்ட்டாரு யாருமில்லாததால் யோகி பாபுவின் காமெடி திரையில் பார்க்கும்போது ரசிக்கும்படியாகவோ சிரிப்பை வரவைப்பது போன்றோ இல்லை. மேலும் படத்தில் நடிக்கும்போது நான் தான் ஹீரோ என கூறிவிட்டு அதன் பின்னர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தன் பெயரை சொல்லி விளம்பரப்படுத்தவேண்டாம் என கூறுகிறாராம். இதனால் தயாரிப்பளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து நஷ்டத்தை சந்திப்பதாக அவர் கூறியிருந்தார்.

இன்றைய தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் யோகி பாபு தற்போது கார், பங்களா வீடு, நிலங்கள், ஊர் மக்களுக்கு கோவில் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். தற்போது அவர் தனது மகள் கார்த்திகாவின் பிறந்தநாளை திரைப்பிரபலங்களை அழைத்து மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?