பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

Author: Prasad
5 May 2025, 7:47 pm

கண்டபடி பேசிய தயாரிப்பாளர்

வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”. இத்திரைப்படத்தை பிரபதீஷ் சாம்ஸ் என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. 

yogi babu explains about not attended gajaana audio release function

இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அதில் யோகி பாபு கலந்துகொள்ளவில்லை. இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ராஜா என்பவர், 7 லட்சம் கொடுத்தால்தான் யோகி பாபு வருவார் என பேசியிருந்தார். மேலும் யோகி பாபுவை குறிப்பிட்டு “நீ நடிகனாக இருக்க தகுதியற்றவன்” என்று ஒருமையில் பேசினார். இவரது பேச்சு அதிர்ச்சியை கிளப்பிய நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார். 

பொய் பேசாதீங்க

“என்னை பற்றி பரப்பப்படும் தவறான தகவல் எனக்கு மன வேதனையை ஏற்படுத்துகிறது. என்னை பற்றி பொய்யான தகவலை பரப்பாதீர்கள்” என யோகி பாபு மன வேதனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது யோகி பாபு தற்போது வேறு திரைப்படங்களில் படு பிசியாக இருப்பதால் அத்திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் அவர் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் யோகி பாபு தரப்பு கூறியுள்ளதாம். 

அதே போல் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான பிரபதீஷ், தயாரிப்பாளர் ராஜா பேசியதற்கும் கஜானா திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளாராம். 

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!
  • Leave a Reply