மளமளவென சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு.. அதுக்காக இப்படியா.? ஆடிப்போன திரையுலக வட்டாரம்..!

Author: Vignesh
22 December 2023, 6:16 pm

கடந்த ஆண்டு வெளியான முக்கால்வாசி படங்களில் யோகிபாபு தான் நடித்திருந்தார். தற்போது முன்னணி ஹீரோக்களை விட இவர் தான் பிசியாக உள்ளார். மேலும் ஒரு நாளைக்கு ஆறு, ஏழு படத்திற்கு சூட்டிங் செல்லும் அளவிற்கு பிஸியாம். தற்போது ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடும் போல யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டமா இருக்காம்.

தமிழ் சினிமாவில் தற்போது யோகிபாபு, வடிவேலின் இடத்தை பூர்த்தி செய்து வருகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். யோகி பாபு போறபோக்கில் அசால்டாக அடிக்கும் காமெடிக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது ஒரு சில படங்களில் யோகிபாபு கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கு ஒரு படி மேலாக தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் யோகி பாபு. அதுவும் அட்லி இயக்கும் லயன் படத்தில் ஷாருக்கான் உடன் நடிக்கிறார்.

இதனிடையே, தற்போது நடிகர் யோகிபாபுவிற்க்கு தெலுங்கு திரை உலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் பிரபாஸ் திரைபடத்தில் காமெடியனாக நடிக்க போகிறார். இந்த திரைப்படத்தில் யோகி பாபுவிற்க்கு தமிழ் திரைப்படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகாமாக கொடுக்கவுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!