கூட்டத்தை பார்த்து தெறித்து ஓடிய யோகி பாபு!

23 January 2021, 5:56 pm
Quick Share

கடலூருக்கு சாமி கும்பிட சென்ற யோகி பாபு அங்கு திரண்ட பொதுமக்களைக் கண்டு வேகவேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி யோகி பாபுவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது யோகி பாபு நடிப்பில், டிக்கிலோனா, சைதான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, ஜகஜால கில்லாடி, பன்னி குட்டி, கடைசி விவசாயி, பிஸ்தா, பேய் மாமா, பூச்சாண்டி, டாக்டர், சலூன், வெள்ளை யானை, மண்டேலா என்று ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இது தவிர, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்த நிலையில், கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். முதலில் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், மக்களோடு மக்களாக நின்று தீபம் ஏற்றி வழிபட்டு, விநாயகர் மற்றும் பாடலீஸ்வரரை தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு வெளியே வந்த யோகி பாபுவை அடையாளம் கண்ட கடைக்காரர்கள்,

அவருடன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். சிறிது நேரத்திலேயே அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். இதையடுத்து வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0