வாரிசு ஆடியோ லான்ச்சுக்கு இதுக்காக தான் நான் போகல.. பத்திரிக்கையாளர் கேள்வியால் கோபமடைந்த யோகி பாபு..!

Author: Vignesh
30 January 2023, 7:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு பல படங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகர் என்ற இடத்தி பிடித்துள்ளவர். பெரிய பட்ஜெட் மற்றும் சிறு பட்ஜெட் படங்களில் நடிகர் யோகி பாபு நடித்தால் போது என்று பலர் வரிசைக்கட்டி நின்று வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகப்பெரிய பங்காற்றினார் நடிகர் யோகி பாபு. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் பிஸியாகும் அளவிற்கு நடிகர் யோகி பாபு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு நடிப்பில் பொம்மை நாயகி என்ற படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் யோகி பாபுவிடம், பெரிய பட்ஜெட் படங்களின் பிரமோஷனுக்கு மட்டும் செல்கிறீர்கள் சிறிய பட்ஜெட் படங்களின் பிரமோஷனுக்கு செல்வதில்லை என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்

yogi babu - updatenews360

தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் இந்த கேள்விக்கு கோபமடைந்த நடிகர் யோகி பாபு, யார் நீ, இந்த படமும் சிறு பட்ஜெட் படம் தான் என்றும் வாரிசு படம் பெரிய பட்ஜெட் தானே என்றும், அந்த ஆடியோ லான்சிற்கும் நிறைய படங்களின் ஆடியோ லான்ச்சிற்கு செல்லவில்லையே என்று தெரிவித்துள்ளார்.

yogi babu - updatenews360

மேலும், எல்லா இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய சூழ்நிலை எப்படி என்று தெரியும், நானும் சின்ன நடிகராக இருந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் யோகி பாபு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Views: - 159

0

0