30 ஆண்டுகளாக, என்கூட இருப்பது நீ மட்டும்தான் – கவின் உருக்கம் !

11 August 2020, 10:30 am
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வேலையை பார்க்க தொடங்கி விட்டார்கள், பலருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அதேபோல் கவினுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன அதனால் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

மேலும், பிக் பாஸிற்கு பெரிதாக எந்த ஒரு அப்டேட் கொடுக்காத கவின் சில நாட்கள் கழித்து லிஃப்ட் என்னும் படத்தில் நடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இதையெல்லாம் விட தற்போது, இவர் மீண்டும் எடை கூடி சரவணன் மீனாட்சி சீரியல் வேட்டையன் என்கிற கதாபாத்திரம் போல் திரும்ப வந்துள்ளார். இதனால் பல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், “அப்பா, அம்மாவுக்கு அப்புறம், இப்போ வரைக்கும் என்னுடன் இருப்பது நீ மட்டும் தான். இப்போது நம் இருவருக்கும் வயது 30” என்று தனது வீட்டில் இருக்கும் Table Fan-ஐ குறிப்பிட்டுள்ளார்.

Views: - 11

0

0