விஜய் அமைதி.. ஆனா அஜித்…? தல, தளபதியை ரகசியங்களை உடைத்த பிரபல பாடகரின் மகன்..!

21 June 2021, 10:05 pm
Quick Share

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகன்களாக உருமாறி இருக்கிறார்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். அஜித் ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து தனது கடின உழைப்பால் மேலே வந்தார். கார் ரேஸர், பைக் ரேசர், ட்ரோன் பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் என பலதுறைகளில் வெற்றி பெற்று வருகிறார். ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். ஆனாலும் ரசிகர்கள் குறையாமல் பல மடங்கு கூடி தான் உள்ளது.

தளபதி விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் ஜாஸ்தியாக இருக்கிறார்கள். இந்த வயதிலும் செம துடிப்பாக டான்ஸ் ஆடுகிறார். உலகெங்கிலும் இவரது டான்ஸ்க்காக ஃபேன்ஸ் இருக்கிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் இருவருடனும் சேர்ந்து நடித்த யுகேந்திரன் ஒரு பேட்டியில் விஜய், அஜித்தை பற்றி கூறியுள்ளார். விஜயுடன் யூத் படத்திலும் அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம் படத்திலும் நடித்து இருப்பார், யுகேந்திரன். அவர் கூறும்போது, இருவரில் அஜித் அடுத்தடுத்து பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தான் இப்படித்தான் என்று வெளிப்படையான கேரக்டர்.

அதற்கு நேர்மாறாக விஜய் மற்றவர்களை தன்னை தவறாக நினைத்து விடக் கூடாது என்ற அமைதியான கேரக்டர். இரண்டு பேரும் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் யுகேந்திரன் கூறியுள்ளார். யுகேந்திரன், மறைந்த பிரபல பாடகர், மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார்.

Views: - 350

4

0