‘நான் பாத்துக்கிறேன்’.. விஜய் மகனுக்கு அஜித் சொன்ன ரகசியம்!

Author: Hariharasudhan
13 January 2025, 11:13 am

ஜேசன் சஞ்சயின் முதல் படத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் பிரச்னை இருப்பதாகவும், இதற்கு அஜித்குமார் சில அறிவுரைகளை வழங்கியதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜேசன் சஞ்சய், இயக்குநராக முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது இயக்கத்தில் உருவாகும் JASON SANJAY 01 என்ற படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஆனால், ஒப்பந்தம் போடப்பட்ட பின்னர், லைகா நிறுவனம், விஜய் மகனின் படத்தைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜேசன் சஞ்சய், நடிகர் அஜித்குமாரின் மேலாளர், சுரேஷ் சந்திராவுக்கு போன் போட்டு இது குறித்து பேசியுள்ளார்.

அப்போது, அஜித்குமாரும் சுரேஷ் சந்திரா அருகில் தான் இருந்துள்ளார். இதனால், அஜித் போனை வாங்கி, ஜேசன் சஞ்சயிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். குறிப்பாக, அஜித்குமார் ஜேசன் சஞ்சய்-க்கு வாழ்த்து கூறி உள்ளார். மேலும், பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.

Ajithkumar call to Jason Sanjay

இதனிடையே, ஜேசன் சஞ்சய், லைகா குறித்து அஜித்திடம் பேசியுள்ளார். அதன் பின்னர் அஜித், லைகா ஒத்து வந்தால் பார், இல்லை என்றால் வேறு தயாரிப்பு நிறுவனங்களிடம் நான் பேசுகிறேன் எனக் கூறி உள்ளார். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!

மேலும், தற்போது அஜித்குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் 3வது இடம் பிடித்து சர்வதேச கவனம் ஈர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல், மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்திலும், ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!