ரூ. 300 கோடி வசூல் தான் டார்கெட்.. பிளான் போட்டு வாரி குவிக்கும் அமரன்!

Author:
6 November 2024, 8:48 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலாக வெளிவந்த திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் மறைந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

amaran-movie- update news 360

இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது .

நாளுக்கு நாள் அமரன் திரைப்படத்தின் வசூல் அமோகமாக இருப்பதாக வெளிவரும் தகவல்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் டார்கெட்டே ரூ. 300 கோடி வசூல் தான் என்றொரு தகவல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸையே வியக்க வைத்திருக்கிறது.

இந்த நிலையில் அமரன் திரைப்படம் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற வெற்றி விழா மேடையிலே ரூ. 150 கோடி வசூலை அள்ளி விட்டதாக சிவகார்த்திகேயனே கூறியிருந்தார். இந்த நிலையில் அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை எட்டும் என கணிப்புகள் வெளியாகி இருக்கிறது .

Siva Karthikeyan Amaran

இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் 150 கோடி கடக்காத நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. 300 கோடி வசூல் அமரன் திரைப்படம் ஈட்டிவிட்டால் விஜய், அஜித்தை தொடர்ந்து 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஹீரோவாக அடுத்ததாக சிவகார்த்திகேயன் மாறிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

குறைந்தபட்சம் அவரது சம்பளம் ரூ.80 கோடி வரை அதிகரிக்கும் என்றும் சினிமா வட்டாரம் கணித்திருக்கிறது. இது சிவகார்த்திகேயன் வாழ்க்கையிலே அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது. அமரன் திரைப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!