இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை மலாய்கா அரோரா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் வாலிப வட்டத்தின் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.
1998 ஆம் ஆண்டில் நடிகரும் இயக்குனருமான அரபாஸ் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் அதிக கவனத்தை செலுத்தி தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த மலாய்கா அரோராவுக்கு கடந்த 2002ம் ஆண்டு அர்கான் கான் என்ற ஒரு மகன் பிறந்தார்.
மேலும் படிக்க: கம்பீருக்கு பாடம் எடுத்த விராட் கோலி… இருவருக்கும் சண்டை நடந்தது எப்படி..? பரபரப்பான மைதானம்… வைரலாகும் வீடியோ!!
அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இதை அடுத்து மலையாக ரோரா பாலிவுட் சினிமாவின் இளம் நடிகரான அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அவருடன் டேட்டிங் செய்து வந்தார்.
இந்த நிலையில் நடிகை மலாய்கா அரோராவை தான் பிரிந்து விட்டதாக அர்ஜுன் கபூரே தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் இருக்கும் சிவாஜி பார்க்கில் தீபாவளி கொண்டாட்டத்தில் நடிகர் அர்ஜுன் கபூர் கலந்து கொண்டார் .
அப்போதாக கூடி இருந்த ரசிகர்கள் மலாய்கா மலாய்கா என கத்தி கூச்சலிட்டனர். அதனை கேட்டு கடுப்பான அர்ஜுன் கபூர் தான் இப்போது சிங்கிளாக தான் இருக்கிறேன். தயவு செய்து ரிலாக்ஸ் ஆகுங்கள் என கூற அதைக் கேட்ட உடனே அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் வாய் அடைத்து போய்விட்டார்கள்.
மேலும் படிக்க: 10 வருடங்களுக்கு பிறகு… பிரிந்த கணவருடன் சேர்ந்து வாழப்போகும் ரேவதி?
இதனால் அர்ஜுன் கபூர் தங்கள் இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டதை முதன்முறையாக வெளிப்படையாக தெரிவித்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை ஏற்பட்டது? ஏன் பிறந்தார்கள் என ஒரு கேள்வி எழுப்ப அவர்கள் இருவருக்கும் வயது தான் தடையாக இருந்ததாகவும் வயது வித்தியாசம் இருப்பதால் தான் இருவரும் பிரிந்து விட்டதாக பாலிவுட் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது.
0
0