கவுண்டம்பாளையம் ரஞ்சித்துக்கு ஆரம்பமே காத்திருந்த ஷாக்.. சம்பவம் செஞ்ச விஜய் சேதுபதி… (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 5:04 pm

பிக்பாஸ் 8வது சீசன் ஆரம்பமானதுமே அடிபொலியாக சென்று கொண்டிருக்கிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வகையில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

18 போட்டியாளர்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் நடிகர் ரஞ்சித்தும் பங்கேற்றுள்ளார். அப்போது ரஞ்சித் வந்ததும் விஜய் சேதுபதி தனது பேச்சை ஆரம்பித்தார்.

உங்க கூட யாரு வந்திருக்காங்க என சேதுபதி கேட்க.. என் நண்பர்கள் கோவையில் இருந்து வந்திருக்காங்க என ரஞ்சித் கூறுகிறார்.

உடனே பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த ரஞ்சித் நண்பர்கள் அறிமுகப்படுத்தினர். அப்போது ரஞ்சித் நண்பர் செந்தில் என்பவர் விஜய் சேபதுபதியை பார்த்து, சாப்பிட்டீங்களா என கேட்டுவிட்டு, இது எங்க ஊரு வழக்கம் என சொன்னார்.

உடனே விஜய் சேதுபதி சாப்பிட்டுவிட்டேன், இது உங்க ஊருல மட்டும் இல்லை எங்க ஊரிலும் தான் கேட்பார்கள், இது வழக்கம் தான் என கூறினார்.

வரவேற்கிறது, அன்பாக கவனிக்கிறது எல்லாம் ஊரிலும் தான் இருக்கு.. எங்க ஊருல வந்தா வெளியே போனா சொல்லுவாங்க என செம டோஸ் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?