பிக்பாஸ் சீசன் 8; குறைவான சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

Author: Hariharasudhan
12 October 2024, 12:46 pm

மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 8-ல் யார் யார் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போட்டியாளர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில் இருந்து தங்களுக்கு கொடுக்கப்படும் சவால்களைச் செய்து, உடன் இருப்பவர்களுடன் நல்ல முறையைக் கையாண்டு பார்வையாளர்களின் மனதையும் வென்று பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறுவது யார் என்பதே இந்த நிகழ்ச்சியின் முதன்மை.

ஹாலிவிட்டில் பிரபலாமான இந்த நிகழ்ச்சி, பாலிவுட்டில் ஊடுருவி, தற்போது கோலிவுட்டில் நுழைந்து, பார்வையாளர்களிடம் வரவேற்பைப் பெற்று சுமார் 8 ஆண்டுகளைக் கடந்து விட்டது. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்பு, நீண்ட காலமாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இடையே சிலம்பரசனும் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்கள் அருண், தீபக், அர்னவ், சத்யா, நடிகர் ரஞ்சித், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை பிரபலம் சுனிதா, செளந்தர்யா நஞ்சுண்டன், பவித்ரா ஜனனி, அன்ஷிதா, தர்ஷிகா, முத்துக்குமரன், நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகை தர்ஷா குப்தா, சாச்சனா, பாடகர் கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, விஜே விஷால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : இந்தி பிக்பாஸில் கலக்கும் ஸ்ருதிகா…. தமிழில் பேசிய அந்த இரண்டு வார்த்தை – வீடியோ!

இதன்படி, தலா ஒரு நாளுக்கு முத்துக்குமரன் ரூ.10,000, தர்ஷிகா – ரூ.25,000, விஜே விஷால் – ரூ.25,000, அன்ஷிதா – ரூ.25,000, ஆனந்தி – ரூ.25,000, பவித்ரா ஜனனி – ரூ.25,000, சத்யா – ரூ.25,000, அர்னவ் – ரூ.25,000, சாச்சனா ரூ.30,000, செளந்தர்யா நஞ்சுண்டன் – ரூ.10,000, கானா ஜெஃப்ரி – ரூ.10,000, தர்ஷா குப்தா – ரூ.25,000, தீபக் – ரூ30,000, ஜாக்குலின் – ரூ.25,000, சுனிதா – ரூ.25,000, ரவீந்தர் சந்திரசேகர் – ரூ.50,000, ரஞ்சித் – ரு.50,000, அருண் – ரூ.25,000 என ஊதியம் பெறுகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி மொத்த சீசனுக்கு ரூ.15 – 18 கோடி சம்பளம் பெறுகிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!