சர்ச்சைக்குள்ளான மும்பை வீடு… திடீரென விற்ற கங்கனா ரனாவத் – எத்தனை கோடி தெரியுமா?

Author:
10 September 2024, 9:13 pm

பாலிவுட் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் மனதில் பட்ட எதையும் வெளிப்படையாக தைரியமாக பேசக்கூடியவர். இதனாலே பல சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து விமர்சிக்கப்பட்டு வருவார்.

kangana ranaut

இதனால் இவருக்கு பாலிவுட்டில் திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காத வண்ணம் அங்குள்ள சில பெரும் புள்ளிகள் கங்கனாவிற்கு கட்டம் கட்டி விட்டார்கள். ஆனால், கங்கனா அதைப்பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படாமல் தன் மனதில் பட்ட எதையும் தைரியமாக பேசி வந்தார்.

ஹிந்தி சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் கங்கனா தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை கங்கனா ரனாவத் நட்சத்திர நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கான் என பல நட்சத்திரங்கள் வசிக்கும் பாந்த்ரா என்ற பகுதியில் ரூ. 20 கோடிக்கு 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு பங்களா வீட்டை வாங்கியிருந்தார்.

சுமார் 3 மாடி கொண்ட அந்த வீட்டில் தனக்கு பிடித்தது போல சில மாற்றங்களை செய்த கங்கனா ரனாவத் சட்டவிரோதமாக அந்த வீட்டை மாற்றி அமைத்ததாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் 2020 – ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியதோடு வீட்டின் சில பகுதிகளை இடித்து தள்ளினர். அந்த வீட்டை தற்போது திடீரென கங்கனா காமாலினி ஹோல்டிங் என்ற நிறுவனத்திடம் ரூ.32 கோடிக்கு விற்பனை செய்திவிட்டாராம்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?