தடை அதை உடை… புது சரித்திரம் படை! பிரச்சனைகளுக்கு பிறகு கெத்தா நடந்து வரும் மணிமகேலை!

Author:
19 September 2024, 8:39 am

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வருபவர் விஜே மணிமேகலை. இவர் 2000 காலகட்டத்தின் நடுப்பகுதியில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகி வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸானார் விஜே மணிமேகலை.

manimegalai-vj-1

அந்த நிகழ்ச்சியில் இவரது காமெடியான நடவடிக்கைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானதை அடுத்து CWC நிகழ்ச்சி தொகுப்பாளியாகவே மாறினார். இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வந்த பிரியங்கா போட்டியாளராக இருந்து கொண்டே மணிமேகலையின் ஆங்கிரிங் பணியிலும் குறுக்கிட்டு அவருக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததோடு ஆதிக்கம் செய்ய ஆரம்பித்தார்.

இது மணிமேகலைக்கு மிகுந்த கோபத்தை வர வைக்க அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார் மணிமேகலை. இதை அடுத்து பிஜே பிரியங்காவின் அராஜகம் ஆடியோவாக வெளியாகி எல்லோரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இதுதான் அவரது உண்மையான முகம் என பிரியங்காவை பலரும் கிழித்து தள்ளினார்கள் .

இதையும் படியுங்கள்: என் வாழ்க்கையை நாசமாக்கிய கமல்….? குடிச்சே சீரழிஞ்சிட்டேன் – நடிகர் சக்தி வேதனை!

VJ priyanka

இந்த நிலையில் தற்போது பிரச்சனைகளுக்கு பின் விஜய் விஜே மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் கெத்தாக நடந்து வரும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் எல்லோரும் அவரை சிங்கப்பெண் என்று பாராட்டி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

மேலும் சிலர் அவரின் இந்த போல்டான முடிவை பாராட்டி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாக மணிமேகலை தன்னுடைய ஸ்டைலில் பதிலடி கொடுப்பது போல் இருப்பதாக கூறி வருகிறார்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?