உங்களுக்கு வயசே ஆகாதா? நதியாவிடம் வழிந்த பிரபலம் – என்ன சொன்னாங்க தெரியுமா?

Author:
19 October 2024, 5:14 pm

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

actress-nadhiya

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல YouTube சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை நதியா அந்த சேனலின் பிரபலமான ஆங்கர் ஒருவர் எப்படி மேம் நீங்க இந்த வயசுல இவ்வளவு அழகா இளமையா இருக்கீங்க? அதன் ரகசியம் என்ன என்ன கேள்வி கேட்டதற்கு…. ரகசியம் அப்படி எல்லாம் எதுவுமே இல்ல நான் நல்லா சாப்பிடுவேன் அதுக்கு ஏத்த மாதிரி நல்ல ஹார்ட் பண்ணி என்னோட உடல் எடை குறைச்சிடுவேன்.

இதையும் படியுங்கள் என் iPhone கூட திருடிட்டாங்க – வேதனையுடன் பேசிய ஜெயம் ரவி!

nadhiya

எப்பவுமே நான் ஸ்லிம் அண்ட் பிட்டா இருக்கணும் அப்படிங்கிறதுல கவனத்தை செலுத்திட்டே இருப்பேன். மத்தபடி எந்தவிதமான டென்ஷனும் பிரஷரும் நான் மண்டைக்குள்ள போட்டுக்க மாட்டேன். ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை வாழுறேன் அதனாலயும் கொஞ்சம் அழகா இருக்கேன் அப்படின்னு சொல்லலாம் என நதியா அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…