கூலி டிரெயிலரில் இடம்பெற்ற “அலேலா பொலேமா” என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?
Author: Prasad12 August 2025, 5:00 pm
அரங்கம் அதிர வெளியாகும் கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அதிகளவு வரவேற்பு உள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த வாரத்திற்கான டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்தன. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் வெறித்தனமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அலேலா பொலேமாவுக்கான அர்த்தம்?
இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் கடந்த ஆகஸ்ட் 2 அன்று வெளியானது. இந்த டிரெயிலர் இடம்பெற்ற பாடலில் “அலேலா பொலேமா” என்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த “அலேலா பொலேமா” என்பதற்கான அர்த்தத்தை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
“நான் டிரெயிலருக்காக பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொஞ்சம் கிரேஸியாக ஏதேதோ செய்துகொண்டிருந்தேன். ஸ்டூடியோவில் ஏதாவது உளரிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பேன். அப்படித்தான் அலேலா பொலேமா என்று பாடி லோகேஷுக்கு அனுப்பினேன். அவர் அதை பிடித்திருக்கிறது என்று கூறினார்.

அலேலா பொலேமா என்பது ஒரு gibberish வார்த்தைதான். கிரேக்கத்தில் இந்த வார்த்தைக்கு ‘சண்டைக்கு நாங்கள் தயார்’ என்று அர்த்தமாம். ஆனால் இதை பாடும்போது எனக்கு அந்த அர்த்தம் தெரியாது” என அனிருத் அப்பேட்டியில் கூறியுள்ளார். எனினும் “அலேலா பொலேமா” என்ற வரிகள் ரசிகர்களை கவர்ந்த வரிகளாக ஆகிப்போகின.
