காப்பாத்துங்க ப்ளீஸ்… இயக்குனர் வெற்றிமாறன் கதறல் – என்ன ஆச்சு?

Author:
25 September 2024, 9:04 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக திரைத் துறையில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்து அவரது புகழைப் பாடியது.

முதல் திரைப்படம் மாபெரும் பாராட்டை பெற்றதை அடுத்து இரண்டாவது திரைப்படமாக ஆடுகளம் படத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்கி தேசிய விருதைப் பெற்றார்.

முதல் திரைப்படம் இரண்டாம் திரைப்படம் எனவே அடுத்தடுத்து தேசிய விருதுகளை குவித்தது. தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன், காக்கா முட்டை, விசாரணை, கொடி, அண்ணனுக்கு ஜே , வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 37 நடிகைகளை சூறையாடிய இளம் நடிகர்…. 75 வயசாகியும் – பகீர் கிளப்பிய பயில்வான்!

மேலும் வட சென்னை, அசுரன், விடுதலை போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா குறித்து பேசி இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் நடிகைகளின் சம்பளம் தான் சினிமாவையே விழுங்கி விடுகிறது.

சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 30 முதல் 40 சதவீதம் குறைத்துக் கொண்டு பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் பணமே லாபம் படத்திற்கு கொடுக்கும் என வெற்றிமாறன் ஆதங்கப்பட்டு பேசி இருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!