இது டபுள் ஆர்ஆர் ஆட்டம்.. ரணகளமான பிக்பாஸ் வீடு!

Author: Hariharasudhan
9 October 2024, 2:27 pm

ரஞ்சித் மற்றும் ரவீந்தர் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்க முயற்சிப்பது போன்ற பிக்பாஸ் புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 இன்றுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏனென்றால், முதல் நாள் அறிமுக நிகழ்வின் போதே தனது நண்பர்களால் மீம்ஸ் கண்டெண்டாக மாறிய கவுண்டம்பாளையம் ஹீரோ ரஞ்சித், இன்று பிக்பாஸ் வீட்டில் ரணகளத்தை அடிதடியோடு ரவீந்தர் துணையுடன் தொடங்கி உள்ளார். இதன்படி, இன்று வெளியிட்டுள்ள ப்ரோமோவில், ரஞ்சித் – ரவீந்தர் இடையே கடும் வாக்குவாதம் ஆக்ரோஷத்துடன் நடைபெறுகிறது.

இதனைத் தடுக்க வந்த இரு தரப்பினரையும் இருவரும் மதிக்கவில்லை என்பது ப்ரோமோவில் தெரிகிறது. அதிலும், ரஞ்சித் ஒருபடி மேலே சென்று, தடுக்க வந்தவரை தள்ளிவிட்டது தெரியாமல் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டுள்ளார். அதேநேரம், கீழே விழுந்தவரும் யாராவது தூக்கி விடுவார்களா என எதிர்பார்த்தபடி, சினிமா சண்டைக் காட்சியைப் போல் ரோலிங்கில் விழுகிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டில் அசம்பாவிதம்… தீவிர சிகிச்சையில் ரவீந்திரன் – அடுத்தது வெளியேறப்போவது இவரா?

‘பசுபதி.. உடனே வேட்டிய மடிக்காத, நீ போலீஸ் கிடையாது..’ என ‘யாராது அவன நிறுத்தச் சொல்லுங்களேண்டா’ எனக் கூறுவது போல் தான் இன்றைய நாள் தொடங்கி உள்ளது. எனவே, இன்று இருவருக்கும் என்ன தகராறு என்பதை கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும், ஓடிடியில் பார்ப்பவர்கள் இப்போதே பார்த்து, புறம் பேச (ஓடிடி புறம்) தொடங்கிவிட்டனர்.

இருந்தாலும், ரஞ்சித் – ரவீந்தர் பொறுமை காத்திருக்கலாம் எனவும் சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு களேபரம் நடக்க, நம்ம சேதுபதி என்ன சொல்லப் போறாரு, இந்த வாரம் கண்டிப்பா VJS Thug Moment உண்டு அப்டின்னு விஜய்சேதுபதி ஆர்மியும், அவரு சொன்னதும் அந்த இடத்துல கமல்ஹாசன் இருந்தால் என்ன செஞ்சிருப்பாரு அப்டின்னு கண்டெண்ட் கிரியேட் பண்றதுக்கு ஆண்டவர் (கமல்ஹாசன்) குழுவும் தயாரா இருக்குது. எது எப்படியோ, இன்னைக்கி ஃபுல் எண்டெர்டெயின்மெண்ட் தான்.

பிக்பாஸ் சீசன் 8, கடந்த அக்டோபார் 6ஆம் தேதி 18 போட்டியாளர்கள் உடன் தொடங்கியது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். முதலில் நடைபெற்ற 24 மணிநேர எலிமினேஷன் சுற்றில் இருந்து சச்சனா வெளியேறினார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களைக் கடந்து மாபெரும் வெற்றி பெற்ற மகாராஜா படத்தில் மகளாக நடித்திருந்தார். மேலும், வனிதா விஜயகுமார் போன்றோர் யூடியூப் தளங்களுக்கு பேட்டிகள் அளித்து பிக்பாஸ் சீசன் 8 மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகின்றனர். மேலும், இந்த வார தலைவியாக தர்ஷிகா உள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!