ஒரே நாளில் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… நீதி கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 6:01 pm

ஒரே நாளில் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… நீதி கேட்டு நாடாளுமன்ற வளாகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டம்!

நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர் கோஷங்களை எழுப்பி, தங்கள் கைகளில் இருந்த வண்ண புகை குப்பிகள் வீசினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று, ஹரியானவை சேர்ந்த நீலம் என்ற பெண் உட்பட 2 பேர் கைது செய்ப்பட்டனர்.

இந்த சூழலில், மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். அதாவது, இன்று ஓரே நாளில் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில், தமிழ்நாட்டில் இருந்து பிஆர் நடராஜன், கனிமொழி, சுப்புராயன், எஸ் ஆர் பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இவர்களை தவிர மற்ற எம்பிக்கள் பென்னி, விகே ஸ்ரீகண்டன், முகமது ஜாவித் உள்ளிட்ட 6 க்கும் மேற்பட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மக்களவையில் அமர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட 15 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், போராட்டம் நடைபெற்று வருகிறது. வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஒரே நாளில் 15 எம்எல்க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!