திடீரென அண்ணனை பார்த்த தங்கை.. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்!

Author: Hariharasudhan
9 November 2024, 5:57 pm

மத்தியப் பிரதேசத்தில் ட்ராப் செய்வதாக அழைத்துச் சென்ற அண்ணன், தங்கையை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோவ்: மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தின், அம்பேத்கர் நகர் என அழைக்கப்படும் மோவ் நகரின் காந்த்வானி பகுதியில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமி ஒருவர், தனது அக்கா வீட்டுக்குச் செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளார்.

அப்போது, சற்று 300 மீட்டர் தொலைவில், அச்சிறுமியின் அண்ணன் முறையான 25 வயது இளைஞர் ஒருவர் அங்கு நின்று உள்ளார். இந்த நேரத்தில் சிறுமியைப் பார்த்த அந்த இளைஞர், அருகில் வந்து, அங்கு வந்த காரணத்தைக் கேட்டு உள்ளார். பின்னர், அவரது அக்கா வீட்டில் இறக்கிவிடுவதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அவரும் அந்த இளைஞர் உடன் பைக்கில் சென்று உள்ளார். ஆனால், அந்த இளைஞர் அங்கு செல்லாமல், எதிர் திசையில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். அப்போது, அச்சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

தொடர்ந்து, இது குறித்து வெளியில் கூறினால் உனது அக்கா மற்றும் மாமாவைக் கொன்று விடுவேன் என மிரட்டிய இளைஞர், சிறுமியை மீண்டும் பஸ் ஸ்டாப்பில் வந்து விட்டுவிட்டுச் சென்று உள்ளார். இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுமி, அங்கு தனக்கு நேர்ந்ததைக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகை மீனா கைது… போதையில் போலீசிடம் கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு!

பின்னர், சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் காந்த்வானி காவல் நிலையத்திற்கு வந்து இளைஞர் மீது பாலியல் புகார் அளித்து உள்ளனர். இது தொடர்பாக போக்சோ வழக்காக பதிவு செய்த போலீசார், இளைஞரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 254

    0

    0