வீதியில் சுற்றித்திருந்த 20 தெருநாய்கள் கொடூரமாக சுட்டுக்கொலை… நெஞ்சை உலுக்கிய சம்பவம் ; போலீசார் விசாரணை..!!!

Author: Babu Lakshmanan
17 February 2024, 1:47 pm

வீதிகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா – மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள பொனக்கல் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்களை குறி வைத்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில், 20 தெருநாய்கள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், 5 நாய்கள் பலத்த காயமடைந்தன.

இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், பஞ்சாயத்து அதிகாரி அளித்த புகாரின் பேரில் ஆயுதச் சட்டம், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!