சேர்க்கை சரியில்லை.. 6 அதிகாரிகளை அதிரடியாக டிஸ்மிஸ் செய்த கவர்னர்..!

Author: Vignesh
3 August 2024, 6:15 pm

ஜம்மு காஷ்மீரில் போதை நெட்வொர்க் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான செயல்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ., போன்ற அமைப்புகள், இந்தியாவில் போதைப் பொருள் வினியோக நெட்வொர்க்கை விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள போலீஸ் அதிகாரி உள்பட, மொத்தம் 6 பேர் போதை கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக மற்றும் நிதி கொடுத்து உதவியதாக புகார் எழுந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி உள்பட 6 அரசு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

இனி ஜம்மு காஷ்மீரில் அரசுப்பணிகளில் பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக, பணி உயர்வு பெறும் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், உளவுத்துறையினரிடம் இருந்து என்.ஓ.சி., சான்றிதழை பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

  • Thug life movie streaming on netflix now சப்தமே இல்லாமல் கமுக்கமாக ஓடிடியில் வெளியான தக் லைஃப்! ஷாக்கில் ரசிகர்கள்!