அருணாச்சல பிரதேச பனிச்சரிவில் சிக்கிய இந்திய ராணுவ வீரர்கள்: 7 பேரின் உடல்கள் மீட்பு..ராணுவம் தரப்பில் தகவல்..!!

Author: Rajesh
8 February 2022, 5:56 pm
Quick Share

இடாநகர்: அருணாச்சல பிரதேசம் காமெங் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Views: - 411

0

0