லாட்ஜில் போதையில் 6 பேருடன் இருந்த பிரபல மாடல் அழகி.. போதைப் பொருள் வழக்கில் பரபரப்பு ட்விஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan20 May 2024, 11:47 am
லாட்ஜில் போதையில் 6 பேருடன் இருந்த பிரபல மாடல் அழகி.. போதைப் பொருள் வழக்கில் பரபரப்பு ட்விஸ்ட்!
கேரள மாநிலம் கருகப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் அந்த லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் கேரள மாநிலம் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி(வயது22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி(22), சூரஜ்(26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித்(24), முகமது அசார்(18), திருச்சூரை சேர்ந்த அதுல்(18) ஆகிய 6 பேர் தங்கியிருந்தனர்.
அந்த அறையில சோதனை செய்தபோது கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தன. இதையடுத்து மாடல் அழகி உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களின் அறையில் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட போது மாடல் அழகி உள்ளிட்ட 6 பேரும் போதையில் இருந்துள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தடுப்பணை.. திமுக ஆட்சியில் நடக்கும் கேலிக்கூத்து : இபிஎஸ் குற்றச்சாட்டு!!
அவர்கள் போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்து வந்திருக்கின்றனர்.
அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதனடிப்பைடையில் இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
0
0