மாணவி புத்தகத்தில் கிடந்த காதல் கடிதம்… பெற்றோருடன் ஆசிரியை குடுமிப்பிடி சண்டை.. போர்க்களமான பள்ளி!!
Author: Udayachandran RadhaKrishnan17 July 2023, 4:52 pm
ஆந்திர மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் ஒய்.வி.எஸ்.நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் லஹரி என்ற மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
லஹரியின் நோட்டுப் புத்தகத்தில் காதல் கடிதம் கிடைத்ததையடுத்து சக மாணவர்கள் பார்த்து பள்ளியின் ஆங்கில பாடப்பிரிவு ஆசிரியை சுனந்தாவிடம் ஒப்படைத்தனர்.
அந்தக் கடிதம் அவரது பள்ளியின் முதல்வர் கஷ்ரி பிரசாத் ரெட்டியிடம் கொடுக்கப்பட்டது. இதனால் லஹரியின் தாய் பிரியாவை பள்ளிக்கு வரவழைத்தனர். அதில் கையெழுத்தின் அடிப்படையில் கடிதம் லஹரி எழுதியது இல்லை என தெரியவந்தது.

இதனையடுத்து லஹரி மற்றும் அவரது தாய் பிரியாவை அனுப்பி வைத்தனர். வகுப்பறைக்குச் சென்றதும், ஆசிரியர் சுனந்தா கடிதத்தின் மீது கேள்வி எழுப்பி லஹரியை அடித்துள்ளார்.
இதுகுறித்து லஹரி உடனடியாக தனது தாயார் பிரியாவிற்கு போன் செய்து தெரிவித்தார். பிரியா பள்ளிக்கு வந்து மகளை ஏன் அடித்தீர்கள் என்று ஆசிரியையிடம் கேட்டுள்ளார்.
இதனை அறிந்த சுனந்தா கணவர் அங்கு வந்த நிலையில் தலைமை ஆசிரியர் முன்னிலையில் இருவருக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியதால் ஒருவரை ஒருவர் தலைமுடி பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
ஆசிரியர் சுனந்தா கணவர் மாணவியின் தாய் பிரியாவை அடித்தார். இந்த விவகாரம் மண்டல கல்வி அலுவலரிடன் தெரிவிக்கப்பட்டு, பின்னர் டிஇஓவுக்கு தெரிவிக்கப்பட்டது.
டிஇஓ, சிறுமியின் தாயிடம் போனில் பேசினார்.இதனையடுத்து ஆசிரியை சுனந்தாவை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.