குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இறந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்.. சத்தியமா இது MEDICAL MIRACLE தான்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2024, 1:52 pm
Guwahati
Quick Share

குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இறந்த நபர் உயிர் பிழைத்த அதிசயம்.. சத்தியமா இது MEDICAL MIRACLE தான்!!

இந்தியாவில் வாகனஓட்டிகளை புலம்பும் வகையில் உள்ளத சாலை மட்டுமே. சாலைகள் நன்றாக இருந்தாலும் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதுதான் பிரச்சனையே.

தற்போது இந்த குண்டும் குழியுமான சாலை ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த தர்ஷன் சிங் எனப்வர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது.

இறந்த தர்ஷன் சிங்குடன் அவரது பேரன் இருந்துள்ளார். ஆம்புலன்ஸ் உடல் கொண்டு வந்து கொண்டிருந்தனர், வீட்லும் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறவினர்கள் துக்கத்துடன் வீட்டில் குவிய, ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் வந்த போது சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து எழுந்தது. அப்போது தர்ஷன் சிங் உடலில் அசைவு தெரிந்தது.

இதைப்பார்த்த பேரன் பள்ளத்தில் எகிறி குதித்ததால் அசைந்திருக்கும் என விட்டுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் கை கால்கள் அசைந்தன, இதை பார்த்து பயந்து போன பேரன், வியப்புடன் இதயத்துடிப்பு இருப்பதை கவனித்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவரிடம் வண்டியை யூடர்ன் அடிக்க சொல்லி மண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நடந்ததை கூறியுள்ளனர். இந்த தகவலை கேட்ட ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்சியில் துள்ளினர்.

தற்போது அவர் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இதையடுத்து அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும், உண்மையில் இது ஒரு MEDICAL MIRACLE என அனைத்து மருத்துவர்களுக்கும் சொல்லும் வார்த்தையை கூறினார்.

Views: - 506

0

0