காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவலி… கட்சியில் இருந்து விலகிய முக்கியத் தலைவர் : சுயமரியாதையில் சமரசம் செய்ய முடியாது என விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 4:20 pm
Anand Sharma - Updatenews360
Quick Share

இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அக்கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் பிரசார குழு தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்து மேலிடத்திற்கு அதிர்ச்சி அளித்தார்.

இதனிடையே கடந்த ஏப்., 26 ம் தேதி, ஹிமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ள அவர், கட்சி கூட்டங்கள் தொடர்பாக தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைக்கவும் இல்லை. இதனால் எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது.


இதனால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், இருப்பினும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் எனக்கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் ‘ஜி23’ தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். அதில், குலாம்நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் முக்கியமானவர்கள்.

கடந்த 1982ம் ஆண்டு முதன்முறையாக சட்டசபை தேர்தலில் ஆனந்த் சர்மா போட்டியிட்டார். பின்னர் 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராவால், ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். காங்கிரசில் பல்வேறு பதவிகளையும் ஆனந்த் சர்மா வகித்துள்ளார்.

Views: - 200

0

0