தமிழக எம்பிக்களுக்கு புதிய சிக்கல்.. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை : சீனியர் பாஜக தலைவர்களை அணுக முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 10:01 pm

புதுடில்லியில் எம்.பி.,க்களுக்கு அரசு தரப்பில் பங்களா அல்லது ஒரு பெரிய அப்பார்ட்மென்ட் ஒதுக்கப்படும்.

இதைத் தவிர, ‘கெஸ்ட் ஹவுஸாக’ பயன்படுத்த அரசு வீடு அல்லது அப்பார்ட்மென்ட் ஒன்றையும் இந்த எம்.பி.,க்கள் அரசிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கு வாடகை செலுத்த வேண்டும்.

தமிழக எம்.பி.,க்களுள் சிலர், இப்படி ‘கெஸ்ட் அப்பார்ட்மென்ட்’களை வாங்கி வேறு நபர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். வெளிநாட்டு துாதரகங்களில் பணிபுரிபவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் என பலர் இந்த அபார்ட்மென்ட்களில் வாடகைக்கு உள்ளனர்.

இவர்களிடமிருந்து இந்த எம்.பி.,க்கள் வாடகை பெற்றாலும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்துவதில்லையாம்.

இதனால் இத்துறையின் அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி, இந்த தமிழக எம்.பி.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாராம். ஆடிப் போன இந்த எம்.பி.,க்கள் சீனியர் பா.ஜ.க, தலைவர்களை சந்தித்து நோட்டீஸை ‘வாபஸ்’ வாங்க முயற்சித்து வருகின்றனராம். …

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?