அதிகாலையில் அதிவேகம்.. பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து : பயணி பரிதாப பலி!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 11:59 am

சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே பெங்களூரில் இருந்து பயணிகளுடன் விஜயவாடா சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றி கொண்டு தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விஜயவாடா சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். இன்று காலை பலமநேர் அருகே உள்ள கால்நடை பண்ணை அருகே வேகமாக சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து டிவைடரில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது..

விபத்தில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.ஒருவர் உயிரிழந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த பலமனேர் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் மரணம் அடைந்தவரின் உடல் பலமநேர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள பலமனேர் போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மிதமிஞ்சிய வேகத்தில் பேருந்து சென்றதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!