ராமர் கோவிலில் அபூர்வ நிகழ்வு… ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி..புல்லரிக்க வைக்கும் VIDEO!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2024, 1:35 pm

ராமர் கோவிலில் அபூர்வ நிகழ்வு… ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி..புல்லரிக்க வைக்கும் VIDEO!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் காட்டப்பட்டு மிகவும் பிரமாண்டமாக கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது. இந்தியாவின் ஸ்டார் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் மிக பெரிய நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ராமரை வழிபட்டு வருகின்றனர்.

கோவிலிலும் தினந்தோறும் விதவிதமான பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவிலில் இன்று ராம் நவமி விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

ராம் நவமி விழாவின் ஒன்பதாம் நாளான இன்று சூரிய அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. சரியாக 12.16 மணிக்கு கோவில் கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

சூரிய ஒளி ராமரின் நெற்றியில் நேரடியாக விழும் அளவிற்கு நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர் ராமர் கோவில் வடிவமைப்பாளர்கள். கண்ணாடிகள், லென்சுகள் கொண்டு இந்த வடிவமைப்பு செய்யப்பட்டதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த சூரிய ஒளி ராமரின் நெற்றியில் சும்மர் 75 மில்லி மிட்டர் அளவு விழும்படியாக வடிவமைத்துள்ளனர். அதேபோல் இந்த நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும் என தெரிவித்துள்ளனர். 5 நிமிடமே நீடிக்கும் இந்த அறிய நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் ராமர் கோவிலில் கூடினர்.

மேலும் படிக்க: கழிவறையில் கட்டு கட்டாக பணம்… பணப்பட்டுவாடா செய்ததா பாஜக? கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் அதிர்ச்சி!

கோவில் கருவறைக்குள் நடைபெறும் இந்த நிகழ்வை பக்தர்கள் பார்க்கும்படியாக சும்மர் 100க்கும் அதிகமான எல்.இ.டி. திரைகளை கோவில் நிர்வாகம் அமைத்துள்ளது. ராமர் கோவில் திறந்த பின் நடைபெறும் முதல் அபூர்வ நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

  • 90 percent reviewers are paid reviewers said by 96 director இவங்க எல்லாரும் காசு வாங்கிட்டுதான் ரிவ்யூ பண்றாங்க- பகீர் கிளப்பிய “96” இயக்குனர்?