என்னைவே போட்டோ எடுக்கறீயா? மண்ட பத்ரம் : யானை முன் போட்டோஷூட் நடத்திய ஜோடிக்கு நடந்த விபரீதம்.. வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2022, 11:35 am

திருமணத்தின் போது மணமக்கள் போட்டோவிற்கு கொடுக்கும் போஸை பார்த்து மண்டபத்தில் இருப்பவர்களுக்கே கோபம் வரும், மற்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் யானை முன் போட்டோஷூட் செய்த மணமகன், அதே யானையால் தென்னமட்டையில் செம்ம அடிவாங்கி உள்ளார்.

இந்த வீடியோவில் மணமக்கள் முகாமில் இருக்கும் யானை முன் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். அவர்களால் யானை டென்ஸனாகி இருக்கும் போல். காட்டில் ஜாலியாக இருக்க வேண்டிய நானே முகாமில் இருக்கேன், இதுல எனக்கு முன்னாடி லவ்ஸ் பண்ணீறிங்களா என்பது போன்று யானை அங்கிருந்த தென்னமட்டை ஒன்றை எடுத்து அந்த ஜோடி மீது வீசி உள்ளது.

யானையின் குறி கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல் காதலனின் மீது படார் என்று அடித்துள்ளது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த ஜோடி திகைத்து போகினர்.
இதனை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள நபர், மண்டைலயே போட்றுவேன் பார்ததுக்கோ.. வந்தமா பாத்தமான்னு போய்கிட்டே இருக்கனும்… என்றெல்லாம் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணயைத்தில் வைரலாகி உள்ள நிலையில் பல லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!