கெஜ்ரிவால் கைதான சம்பவத்தில் அதிரடி திருப்பம்.. அமலாக்கத்துறை ஷாக் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 11:59 am

கெஜ்ரிவால் கைதான சம்பவத்தில் அதிரடி திருப்பம்.. அமலாக்கத்துறை ஷாக் : நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை தொடர்ந்து மார்ச் 28ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அளிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது வரை அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த சூழலில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரியும் மற்றும் காவலில் வைத்து விசாரிக்கும் உத்தரவுக்கு எதிராகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கெஜ்ரிவாலின் கைது மற்றும் ரிமாண்ட் உத்தரவு ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்றும் அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவரது வழக்கறிஞர் குழு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கைது மற்றும் காவலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இடைக்கால நிவாரணம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லி அமைச்சர்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுடன் இணைந்து டெல்லி சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!