உண்மையான பாகுபலியாக மாறிய நடிகர் பிரபாஸ்.. ₹5 கோடி வெள்ள நிவாரணம் அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 11:50 am

ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஆந்திராவில் 17 பேரும், தெலங்கானாவில் 16 பேரும் என 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பலரைக் காணவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயன்றுவருவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி அவரது சொந்த நிறுவனமான ஹெரிடேஜ் பால் நிறுவனத்தின் மூலம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கு தலா ₹ 1 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?