நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைவேன்… நடிகையின் அறிவிப்பால் திரையுலகில் சலசலப்பு..!!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 4:17 pm

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைவேன் என்று நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் உருவான தலைவி படத்தில் நடித்த தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது இவர் சந்திரமுகி-2 படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளது. சமூகவலைதளங்களில் பட ஏக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை சொல்லி வம்பில் சிக்கி கொள்வார்.

இந்த நிலையில், பாலிவுட் நடிகை கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது:- கங்கனா ரனாவத் எங்கள் நாட்டைப் பற்றியும், பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார்.

மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களையும், உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள், எனக் கூறினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?