இனி இந்தியா முழுவதும் பாஜக… மோடி மட்டுமே காரணமல்ல : பிரசாந்த் கிஷோர் சொன்ன காரணங்கள்.. இண்டியா கூட்டணி ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 1:53 pm

இனி இந்தியா முழுவதும் பாஜக… மோடி மட்டுமே காரணமல்ல : பிரசாந்த் கிஷோர் சொன்ன காரணங்கள்.. இண்டியா கூட்டணி ஷாக்!

சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருந்தது. அதிலும் இப்போது இந்தி ஹார்ட் லேண்ட் பகுதியில் பாஜகவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது.
இதற்கிடையே பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தின் சிங்வாரா தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் வெளியான 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து விளக்கினார்.

இதில் 3 மாநிலங்களில் பாஜக வென்ற நிலையில், பாஜகவின் வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் இமேஜ் மட்டும் காரணம் இல்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அவர் தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதற்கு மோடியின் இமேஜ் மட்டும் காரணமில்லை. மொத்தம் 4 காரணங்கள் இருக்கிறது.. முதலில், பாஜக சித்தாந்தம் இந்துத்துவா; இரண்டாவது தேசியவாதம்; மூன்றாவது பாஜகவின் நிதி வலிமை, நான்காவது அடித்தட்டு மக்களுக்கு உதவ அவர்கள் கொண்டு வந்த நலத்திட்டங்கள்.

மோடியின் இமேஜ் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், பாஜக அதை வைத்து மட்டுமே வாக்குகளை பாஜக பெறுவதில்லை.. எதிர்க்கட்சியினர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும், பாஜகவை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் இந்த நான்கு விஷயங்களில் குறைந்தது மூன்றுக்குப் பதிலடி தர வேண்டும். இல்லையெனில் என்ன செய்தாலும், என்ன கூட்டணி அமைத்தாலும் 10இல் 7 முறை உங்களுக்குத் தோல்வி தான் கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சி ஏழை மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் திட்டுக்களைக் கொண்டு வர வேண்டும். கட்சி அமைப்பை வலுப்படுத்த வேண்டும். கூடுதல் அதிகாரம் தலைமைக்கு இருக்க வேண்டும்.. அதேபோல இந்துத்துவாவை விடச் சிறந்த ஒரு தேசியவாத சித்தாந்தம் உங்களிடம் இருக்க வேண்டும். உண்மையில், இந்த மூன்று விஷயங்களில் பாஜகவை விடச் சிறந்து இருந்தால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும்.

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக நீங்கள் கூறலாம். அங்கே கள நிலவரத்தைப் பார்க்க வேண்டும். பொதுமக்கள் அப்போது ஆளும் அரசு மீது கோபமாக இருந்த நிலையில், அவர்கள் எதிராக வாக்களித்தார்கள். அங்கே காங்கிரஸ் கட்சி மட்டுமே மற்று கட்சியாக இருந்ததால் அவர்களுக்கு வாக்களித்தனர். சமீபத்தில் வெளியான தெலுங்கானா தேர்தல் முடிவுகளில் கூட காங்கிரஸ் வெற்றிக்குக் காரணம் கேசிஆர் ஆட்சிக்கு எதிரான மனநிலை தானே தவிரக் காங்கிரஸ் செல்வாக்கு இல்லை.

இப்போது பீகாரிலும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. இங்கே நடத்திய சர்வேயில் சுமார் 50-55% புதிய மற்றும் மாற்று அரசியல் கட்சியைத் தேடுகிறார்கள். எந்தக் கட்சி மாற்றாக இருக்கும் என்று மக்களுக்குத் தெரியாது..

ஆனால் தற்போது இருக்கும் எந்தவொரு கட்சியும் பீகாரில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றே மக்கள் நினைக்கிறார்கள். நான் நடத்தி வரும் ஜான் சுராஜ் அமைப்பில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 2,000-2,500 பேர் இணைகிறார்கள் என்றும், இந்த பாதயாத்திரை முடிவடையும் போது, ​இதில் ​ஒரு கோடி பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள்” என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!