யாரும் செய்யாத சம்பவம்.. முதல்முறையாக செய்த ராகுல் காந்தி : பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் ஆறுதல்!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 12:12 pm

உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2ஆம் தேதி போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அலிகாரில் உள்ள பிலக்னா கிராமத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

டெல்லியில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட ராகுல், சாலை மார்க்கமாக உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸுக்கு பயணம் செய்தார். இந்த சம்பவம் நடந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அந்த இடத்துக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.

அங்கு ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட் உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.

உயிரிழந்த குடும்பத்தினரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை, விழா ஏற்படும் செய்யும் அமைப்பில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் என்பதால் அவர்களுக்கு அதிக இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன், உத்தரப்பிரதேசம் முதல்வரை மனம் திறந்து இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  • vijay does not come out after 6 o clock said by suriya siva 6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்