சூப்பர் மார்க்கெட்டுகளில் மது விற்க எதிர்ப்பு: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்…அன்னாஹசாரே அறிவிப்பு..!!

Author: Rajesh
9 February 2022, 5:37 pm
Quick Share

மும்பை: மராட்டியத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் மதுவை விற்பனை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து.

மராட்டிய மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளது. இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், விவசாயிகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக மாநில அரசு தரப்பில் கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் மாநில அரசின் முடிவுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் , சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஸ்டோர்களிலும் ஒயின் விற்க அனுமதியளிக்கும் முடிவுக்கு எதிராக வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

Views: - 428

0

0