திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற அண்ணாமலை : நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. ஒரே வார்த்தையில் பதில்!

Author: Udayachandran RadhaKrishnan
5 January 2023, 1:54 pm
Tirupati Annamalai -Updatenews360
Quick Share

திருப்பதி மலையில் பாத யாத்திரையாக சென்று ஏழுமலையானை வழிபட்டார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து மலையேறி சென்ற அவர் இரவு திருப்பதி மலையில் தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற அண்ணாமலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி கும்பிட்டார்.

தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

இந்த நிலையில் கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலையை பக்தர்கள் குறிப்பாக தமிழக பக்தர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டி போட்டு செல்பி எடுத்து கொண்டனர்.


இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் அண்ணாமலையை பார்த்து அவருடன் பேசி கைகுலுக்கி செல்பி எடுத்து கொண்டனர்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டி கொண்டதாகவும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட தக்க எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பி வைக்கும் என்றும் கூறினார்.

Views: - 500

1

0