108 அடி நீள ஊதுபத்தி… நகர் முழுக்க வீசும் நறுமணம் ; கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் ஏற்றப்பட்ட மிக பிரமாண்ட ஊதுபத்தி…!

Author: Babu Lakshmanan
16 January 2024, 3:37 pm

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் அயோத்தியில் 108 அடி கொண்ட பிரமாண்ட ஊதுபத்தி ஏற்றப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆக.,5ல் ராமர் கோயில் கட்டுமானத்தை பூமி பூஜையுடன் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன் பிறகு கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதிர்ல, பிரதமர் மோடி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், கோவிலுக்கு பல்வேறு தரப்பினர் காணிக்கைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், குஜராத்தின் வதோதரா நகரில் உருவாக்கப்பட்ட 108 அடி நீள ஊதுபத்தி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3,610 கிலோ எடையும், மூன்றரை அடி சுற்றளவும் கொண்ட இந்த வாசனை ஊதுபத்தி, இன்று ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கம் எழுப்பினர்.

மிக பிரமாண்டமான ஊதுபத்தி ஏற்றப்பட்டதால் அயோத்தி நகர் முழுவதும் நறுமணம் பரவத் தொடங்கியது. இந்த ஊதுபத்தி முழுவதும் எரிந்து முடிக்க ஒன்றரை மாதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!