சித்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல் : ICU-வில் இருந்து சிசுவை கடத்திய பெண்.. சிசிடிவி காட்சி வெளியானது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 6:21 pm
Child Kidnap in GH -Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அரசு மருத்துவமனையில் மங்க சமுத்திரத்தை சேர்ந்த சபானா என்ற பெண்ணுக்கு கடந்த 14 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை எடை மிகவும் குறைவாக இருந்ததால் சிசுவை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பெண் ஒருவர் அந்த குழந்தையை கடத்தி சென்றதாக கருதப்படுகிறது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 1239

0

0