வங்கி மோசடி வழக்கு : யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமின்

Author: kavin kumar
16 February 2022, 8:41 pm

மும்பை: வங்கி மோசடி வழக்கில் கைதாகியுள்ள முக்கிய குற்றவாளியும், யெஸ் வங்கி நிறுவனருமான ராணாகபூருக்கு கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்த யெஸ் வங்கி கடன் மோசடியில் ஈடுபட்டதால் திவால் நிலைக்கு வந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியின் செயல்பாட்டை முடக்கியது.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. கடனை திருப்பி செலுத்த தகுதியில்லாத பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் ராணா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூ.4,300 கோடி அளவுக்கு பயன் அடைந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக, ராணா கபூர் மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தனர். யெஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் சென்றது. இந்நிலையில் மோசடி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தில் ரூ. 300 கோடி இழப்பீடு ஏற்படுத்திய வழக்கினை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் கைதாகியுள்ள ராணா கபூர் ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ரூ. 5 லட்சம் பிணையத் தொகை செலுத்தியதன் பேரில் ஜாமின் வழங்கியது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?