நேரலையில் பாலியல் சீண்டல்.. இளம்பெண் வெளியிட்ட பகீர் வீடியோ!

Author: Hariharasudhan
7 November 2024, 12:04 pm

சமூக வலைத்தள வீடியோவை எடுக்கும்போது சிறுவன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஐடி நகரில் இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதற்காக செல்ஃபி வீடியோ ஒன்றையும் எடுத்துக் கொண்டே வந்துள்ளார்.

அந்த நேரத்தில் திடீரென வந்த ஒரு 10 வயது மதிக்கத்தக்க சிறுவன், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் உடனடியாக கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அச்சிறுவன் தப்பியுள்ளார். இந்த வீடியோவை அப்படியே பதிவேற்றிய அப்பெண், இது மிகவும் கொடுமையானது என கூறியுள்ளார். இதனை அடுத்து, இந்த வீடியோ தீயாக சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், இதுகுறித்து அப்பெண்ணை தொடர்பு கொண்ட போலீசார், புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.

Sexual assault

ஆனால் அப்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதேநேரம், மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் பெங்களூர் போலீசுக்கு நன்றி கூறியுள்ளார் அப்பெண். அதேநேரம், அந்தச் சிறுவனை அங்குள்ள சிசிடிவி மூலம் கண்டறிந்து, அவர் இனி இதுபோன்று யாரிடமும் நடக்காத வண்ணம் மாற்ற வேண்டும் எனவும் அப்பெண் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: திருமணமான 3 வருடத்தில் விவாகரத்து.. நிறைமாத கர்ப்பிணியான சீரியல் நடிகை!

அதேநேரம், அச்சிறுவனுக்கு 10 முதல் 11 வயது இருக்கும் என்றும் இளம்பெண் கூறியுள்ளார். இவ்வாறு நடுரோட்டில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டாலில் ஈடுபட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!