பல மணிநேரம் நடந்த ED ரெய்டு… அதிகாலையில் அமைச்சர் அதிரடியாக கைது ; அதிர்ச்சியில் I.N.D.I.A. கூட்டணி..!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 9:46 am

பல மணிநேர சோதனைக்கு பிறகு மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியாவை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது ஆளும் திரிணாமுல் காங்கிரஸை மட்டுமல்லாது, I.N.D.I.A. கூட்டணியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாடு முழுவதும் ஆளும் கட்சியில் இருக்கும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தி வருகிறது. டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயினை கைது செய்ததது. தொடர்ந்து, தமிழகத்தில் போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததுடன், மற்றொரு அமைச்சர் பொன்முடி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

தற்போது, மேற்கு வங்க மாநிலத்தில் வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று சோதனையை நடத்தியது. இதற்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக இருந்த போது, உணவுத்துறையில் முறைகேடு தொடர்பாக, கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள சொந்தமான 2 வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு நெருக்கமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கையும் அமலாக்கத்துறை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், I.N.D.I.A. கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!