திடீரென சாலையில் கொட்டிய பணமழை… போட்டிபோட்டு அள்ளிய வாகன ஓட்டிகள்… வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
24 January 2023, 2:19 pm
Quick Share

மேம்பாலத்தில் நின்று ஒருவர் பணத்தை தூக்கி வீசுவதை வாகன ஓட்டிகள் போட்டி போட்டு அள்ளிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியின் மேம்பாலத்தில் பைக்கில் வந்த கோட்சூட் போட்ட இளைஞர் ஒருவர், தனது பையில் கொண்டு வந்த ரூபாய் நோட்டுக்களை தூக்கி கீழே வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, பணத்தை போட்டி போட்டு அள்ளினர்.

திரைப்படங்களில் வரும் காட்சி போல் இருந்த இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் அந்த நபரை பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்தப் பகுதியில் அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

அந்த நபர் சுமார் ரூ.3000 வரை வாரி இறைத்திருக்கலாம் என்றும், திரைப்பட ஷூட்டிங்கிற்காக இதுபோன்று செய்யப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

Views: - 88

0

0

Leave a Reply