கங்கை நதியில் கரைபுரண்டோடும் வெள்ளம்… பாகனுடன் சிக்கிய யானை…!! அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
13 July 2022, 6:22 pm

பீகாரில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் பாகனுடன் வளர்ப்பு யானை சிக்கிய அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளங்கள் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் சாலைகளில் குளம் போல வெள்ளம் தேங்கி நிற்கின்றன. தொடர் கனமழை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பீகார் மாநிலத்தில் கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அப்போது, அந்த ஆற்றில் பாகனுடன் அவர் வளர்த்த யானை சிக்கிக் கொண்டது. யானையின் மீது பாகன் அமர்ந்திருக்க, யானை தண்ணீருக்குள் சென்று சென்று மேலே எழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த யானை, தன்னை காப்பற்றாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தன்னை வளர்த்த பாகனின் உயிரையும் காப்பாற்றியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 988

    0

    0