திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கியது பிரம்மோற்சவம் : அக்.,5ம் தேதியுடன் நிறைவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 8:35 pm

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் இன்று துவங்கி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற்று நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம் இன்று மாலை கோவிலில் நடைபெற்றது.

அப்போது தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் நிற கொடியை கோவிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர்.

அத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியதாக ஐதீகம். தொடர்ந்து இரவு ஏழுமலையானின் பெரியசேஷ வாகன சேவை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!