‘சாவு கண்ட வீட்டில் ஒருநாள் யாரும் இருக்கக்கூடாது’…ஜோசியர் சொன்னதை நம்பி வீட்டை பூட்டிய குடும்பம்: 8 பவுன் நகை, ரொக்கம் ‘அம்பேல்’..!!

Author: Rajesh
13 April 2022, 12:57 pm
Quick Share

சிமோகா: வீட்டில் ஒருநாள் தங்க கூடாது என ஜோதிடர் கூறியதை கேட்டு குடும்பத்தினர் வெளியே தங்கிய போது சுமார் ரூபாய் 3.46 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சிமோகா நவுலே ஜோதி நகரை சேர்ந்த ருத்ரேஷ். இவரின் அண்ணன் வேதாந்தா சமீபத்தில் இறந்து போயிருந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

அப்போது, ஜோதிடர் ஒருவர் சாவு கண்ட வீட்டில் ஒருநாள் யாரும் இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆகாது என கூறியுள்ளார். இதனால் ருத்ரேஷ் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் ஏப்ரல் 9ம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியிலும் சொந்தகாரர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

இதனால் அன்று வீட்டில் யாரும் இல்லாததை கவனித்த திருடர்கள் வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த 60 கிராம் தங்க நகைகளையும், ரூபாய் 10 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது திருடு போயிருப்பதை கண்டு ருத்ரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஷிமோகா ஜெயநகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1008

0

0